ரஷ்யாவில் கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் தொடங்கியது - News View

About Us

About Us

Breaking

Sunday, December 6, 2020

ரஷ்யாவில் கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் தொடங்கியது

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தடுப்பு மருந்தான ஸ்புட்னிக் 5 விநியோகம் தொடங்கியது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை தயாரிப்பதில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி பதிவுசெய்து இருப்பதாக ரஷியா கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது.

ஸ்புட்னிக் 5 என அழைக்கப்படும் அந்த கொரோனா தடுப்பூசி, இந்தியாவிலும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி கொரோனாவில் இருந்து மக்களைப் பாதுகாப்பதில் 92 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என்று ரஷியா கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து ஸ்புட்னிக் 5 தடுப்பு மருந்தை தனது மகளுக்கு செலுத்திப் பார்த்து அதனால் அவர் நல்ல பயனடைந்ததாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்திருந்தார்.

தற்போது 70 க்கும் மேற்பட்ட ரஷ்ய மருத்துவமனைகளில் இந்த தடுப்பு மருந்து ரஷ்ய அரசால் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அனைத்து நாடுகளைப்போல ரஷ்யாவும் முதலில் முதல்நிலை நோய்த்தடுப்பு பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்க முடிவு செய்துள்ளது. 

மேலும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக சேவையாளர்களுக்கு கிடைக்கும் என்று பணிக்குழு கூறியுள்ளது. 

ஏனெனில் அவர்கள் நோய்த் தாக்கும் அபாயத்தை அதிகம் கொண்டுள்ளனர். இவர்களது உடலில் இந்த தடுப்பு மருந்து சோதனை செய்து பார்க்கப்படும். இது வெற்றி பெறும் பட்சத்தில் பொதுமக்களுக்கும் அளிக்கப்படும். 

ஆனால் பாதுகாப்பு கருதி கர்ப்பிணி பெண்கள், மூச்சு திணறல் உள்ளவர்கள் உள்ளிட்ட சிலருக்கு தற்போது தடுப்பு மருந்து வழங்கப்படவில்லை. 

இந்த தடுப்பு மருந்து இரண்டு ஊசிகள் மூலமாக செலுத்தப்படுகிறது. முதல் ஊசி நோயாளியின் உடலில் செலுத்தப்பட்டு 21 நாட்களுக்கு பின்னர் இரண்டாவது ஊசி செலுத்தப்படும்.

முன்னதாக ரஷியாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பூசி இந்தியா மற்றும் சீனாவிலும் உற்பத்தி செய்யப்படும் என ரஷிய ஜனாதிபதி புதின் தெரிவித்திருந்தார். காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் 12வது மாநாட்டின் போது புதின் இதனை தெரிவித்தார்.

No comments:

Post a Comment