எமது அரசாங்கத்தில் விலை குறைக்கப்பட்ட பொருட்களின் விலைகளை தற்போதைய அரசாங்கம் அதிகரித்துள்ளது - கபீர் ஹாசீம் - News View

About Us

About Us

Breaking

Saturday, December 5, 2020

எமது அரசாங்கத்தில் விலை குறைக்கப்பட்ட பொருட்களின் விலைகளை தற்போதைய அரசாங்கம் அதிகரித்துள்ளது - கபீர் ஹாசீம்

எமது அரசாங்கத்தில் விலை குறைக்கப்பட்டிருந்த அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தற்போதைய அரசாங்கத்தினால் அதிகாரிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு பொருட்களின் விலைகளை குறைப்பதாக அறிவித்த போதும் அவ்வாறு எவ்வித பொருட்களுக்கும் விலைகள் குறைக்கப்படவில்லையென ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், எமது அரசாங்கத்தில் விலை குறைக்கப்பட்டிருந்த அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தற்போதைய அரசாங்கத்தினால் அதிகாரிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு பொருட்களின் விலைகளை குறைப்பதாக அறிவித்த போதும் அவ்வாறாக விலைகள் குறைக்கப்படவில்லை.

நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின் முறையான பொருளாதார திட்டம் இருக்க வேண்டும். ஆனால் ஒரு வருடத்தில் ஒன்றையும் காணவில்லை. 

இது தொடர்பாக இவர்களிடம் முறையான கொள்கைத் திட்டம் இல்லாமையினால் அவர்களினாலேயே நாட்டின் அபிவிருத்திக்கும், இறைமைக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்படுமென்று அரசியல் மேடைகளில் கூறிய திட்டங்களை இப்போது இவர்கள் முன்னெடுத்து செல்கின்றனர்.

ஐக்கிய தேசிய கட்சியினால் அரச சொத்துக்களை விற்பதாக குற்றச்சாட்டை முன்வைத்தனர். ஆனால் இவர்கள் வந்ததுடன் காலிமுகத்திடலில் 03 ஏக்கர் நிலத்தை விற்றுள்ளனர். கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையை இந்தியாவுக்கு கொடுக்க முயற்சிக்கின்றனர்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment