கிளிநொச்சி மாவட்டத்தில் 882 பேர் பாதிப்பு : 93 வீடுகள் பகுதி அளவில் சேதம்..! - News View

About Us

About Us

Breaking

Thursday, December 3, 2020

கிளிநொச்சி மாவட்டத்தில் 882 பேர் பாதிப்பு : 93 வீடுகள் பகுதி அளவில் சேதம்..!

கிளிநொச்சி மாவட்டத்தில் 292 குடும்பங்களைச் சேர்ந்த 882 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. 

இன்று காலை 9 மணி வரை திரட்டப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் வீடொன்று முழுமையாகவும், 93 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அப்புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேவேளை 2 பாதுகாப்பு அமைவிடங்களில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 88 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 67 குடும்பங்களைச் சேர்ந்த 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 144 குடும்பங்களைச் சேர்ந்த 397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 05 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 78 குடும்பங்களைச் சேர்ந்த 249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடொன்று முழுமையாகவும், 68 வீடுகள் பகுதியளவிலும் சேதம் அடைந்துள்ளன. 

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 03 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு ஏற்பட்ட பகுதிக்கள் தொடர்பான தகவல்கள் தொடர்ந்தும் திரட்டப்பட்டு வருகின்றது.

No comments:

Post a Comment