நோர்வே நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 21 பேர் மாயம் - News View

About Us

About Us

Breaking

Thursday, December 31, 2020

நோர்வே நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 21 பேர் மாயம்

நோர்வே நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 21 பேர் மாயமாகியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பிரபலமான நாடு நோர்வே. இந்நாட்டில் பனிப்பொழிவு மிகவும் அதிக அளவில் இருக்கும்.

இதற்கிடையில், நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் அமைந்துள்ள கஜர்டர்ம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆஸ்க் என்ற கிராமத்தில் 1,000 க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆஸ்க் பகுதியில் நேற்று (30) திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதனால், வீடுகளில் இருந்த பலரும் மண்ணுக்குள் புதைந்து மாயமாகினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மீட்புப்படையினர் நிலச்சரினால் மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுப்ட்டனர். மேலும், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்த பொதுமக்கள் அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர்.

நிலச்சரிவால் சிறு காயங்களுடன் வீடுகளில் சிக்கிக் கொண்டவர்களில் 10 பேரை மீட்புப்படையினர் உயிருடன் மீட்டனர். ஆனால், இன்னும் 21 பேர் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால், மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை நோர்வே பிரதமர் எர்னா சோல்பர்க் நேரில் பார்வையிட்டார். மேலும், மாயமானவர்களை தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இந்த நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்வதாவும் எர்னா கூறினார்.

No comments:

Post a Comment