இலங்கையில் ஒரு வருடத்தில் 18 ஆயிரம் கிலோ போதை ப்பொருட்களுடன் 72 ஆயிரம் பேர் கைது - News View

About Us

About Us

Breaking

Monday, December 7, 2020

இலங்கையில் ஒரு வருடத்தில் 18 ஆயிரம் கிலோ போதை ப்பொருட்களுடன் 72 ஆயிரம் பேர் கைது

(எம்.எப்.எம்.பஸீர்) 

இலங்கையில் கடந்த 2019 நவம்பர் முதல் இதுவரையிலான ஒரு வருட காலப்பகுதிக்குள் 18 ஆயிரம் கிலோ பெறுமதியான பல்வேறு வகை போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் 72 ஆயிரம் வரையிலான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். 

இராஜகிரியவில் அமைந்துள்ள கலால் வரித் திணைக்கள தலைமையகத்தில் இடம்பெற்ற ஒன்றிணைந்த ஊடக சந்திப்பின் போது அவர் இதனை வெளிப்படுத்தினார். 

நேற்று மாரவில - தொடுவாவ பகுதியில் கைப்பற்றப்பட்ட 300 கோடி ரூபா வரை பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் விதமாக இந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. 

இதன்போது கலால் வரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், ஆரியசிங்க போதரகம முதலில் விளக்கமளித்தார். 

'கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் கிடைத்த தகவல் தொடர்பில் விசாரிக்க நாம் இரு அதிகாரிகளை விஷேடமாக ஈடுபடுத்தினோம். அதன் பிரதிபலனே இந்த சுற்றி வiளைப்பு. 

கடற்படை, தேசிய உளவுச் சேவையின் உதவியும் இதற்காக பெறப்பட்டது. இதில் ஹெரோயின் போதைப் பொருள் 100 கிலோ இருந்தன. அவை தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த போதைப் பொருள் வர்த்தகர் ஒருவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஐஸ் போதைப் பொருள் பிரிதொருவருக்கு வந்துள்ளது. அவர்கள் அனைவரையும் கைது செய்துள்ளோம். 

இரு கார்கள், போதைப் பொருளை கடத்திச் செல்ல தயாராக இருந்த கே.டி.எச். வேன் மற்றும் மின் பிறப்பாக்கி ஏற்றப்பட்டிருந்த பார ஊர்தி ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளோம். மின் பிறப்பாக்கியின் உள்ளே சூட்சுமமாக மறைத்து போதைப் பொருள் கொழும்பு கடத்தல் காரர்களுக்கு கடத்தப்பட இருந்தது. 

இதனைவிட, கடத்தல் காரர்கள், கடந்த மாதம் முதல் மாரவில தொடுவாவ பகுதியில் ஹோட்டல் ஒன்றில் தாங்களை, பாதை அபிவிருத்தி நிறுவனம் ஒன்றின் பொரியியலாளர்களாக காட்டிக்கொண்டு தங்கியிருந்து போதைப் பொருள் கடத்தலுக்கான வேலைகளை செய்துள்ளனர்.' என தெரிவித்தார்.

No comments:

Post a Comment