அமைச்சின் செலவுகளை 10 ரூபாவினால் குறைக்கும் சம்பிரதாயம் நகைப்பிற்குரியது - ஆளும், எதிர்த்தரப்பில் சுட்டிக்காட்டு - News View

About Us

About Us

Breaking

Saturday, December 5, 2020

அமைச்சின் செலவுகளை 10 ரூபாவினால் குறைக்கும் சம்பிரதாயம் நகைப்பிற்குரியது - ஆளும், எதிர்த்தரப்பில் சுட்டிக்காட்டு

சம்பிரதாயபூர்வமாக அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீட்டில் 10 ரூபாவை குறைக்கும் பிரேரணையால் எந்தப் பயனும் இல்லையென ஆளும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பில் நேற்று பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

தற்காலத்தில் பெறுமதியில்லாத 10 ரூபாவை குறைப்பது நகைப்பிற்குரிய எனவும் சுட்டிக் காட்டப்பட்டது.

வர்த்தக அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புள்ள இராஜாங்க அமைச்சுக்கள் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது.

எதிர்க்கட்சி சார்பில் 10 ரூபாவை குறைப்பது தொடர்பான யோசனையை மாத்தறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பதிரண முன்வைத்தார்.

இன்று விவாத்திற்கு எடுக்கும் வர்த்தக அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செலவுகளை குறைப்பது தொடர்பான யோசனை பிரகாரம் 10 ரூபாவை நீக்குவது நகைப்பிற்குரிய விடயம் சுதந்திரம் கிடைத்த 72 வருடங்களாக இவ்வாறு நீக்கப்படுகிறது. அன்று 10 ரூபா நீக்கப்பட்டது. அப்பொழுது அதன் பெறுமதி ஒரு இலட்சம் ரூபாவாக இருக்கும். இன்றும் 10 ரூபா நீக்குவது நகைப்பிற்குரியது என்றார்.

சபாநாயகர், இது சம்பிரதாயபூர்வ விடயம். யோசனையை முன்வையுங்கள் என்றார்.

சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் இது தொடர்பில் கருத்து முன்வைத்தார்.

10 ரூபா யோசனை முன்வைத்து அதற்கு எதிராக பேசுகிறார். அவர் கூறுவதை நாமும் ஏற்கிறோம். தேவையாயின் அடுத்த வரவு செலவுத்திட்டத்தில் மாற்றுவோம். 10 ரூபா என்பது நகைப்பிற்குரியது. அந்த சரத்தை இரு தரப்பும் கலந்துரையாடி மாற்றுவோம் என்றார்.

புத்திக பதிரண எம்.பி மீண்டும் இது தொடர்பில் கருத்து முன்வைத்ததோடு, சம்பிரதாயங்களில் நல்லவற்றை தொடர்வோம். 10 ரூபாவில் 05 டொபி தான் வாங்கலாம். இதனை மாற்ற வேண்டும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்ரமணியம் நிசாந்தன்

No comments:

Post a Comment