நல்லின மரமுந்திரிகைக் கன்றுகள் இலவசமாக வழங்கி வைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, November 19, 2020

நல்லின மரமுந்திரிகைக் கன்றுகள் இலவசமாக வழங்கி வைப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு பிராந்தியக் காரியாலயத்தினுடாக தற்போது நல்லின் குறுகிய காலத்தில் விளைச்சலைத் தரக்கூடிய மரமுந்திரியைக் கன்றுகள் இலவசமாக தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேசத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட மரமுந்திரிகை அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் எஸ்.தேவராஜன் தெரிவித்தார்.

விவசாயிகள் இவ்வாறான நல்லின மரமுந்திரிகைக் கன்றுகளை வேறு இங்களில் கொள்வனவு செய்வதென்றால் ஒரு கன்றின் விலை 250 ரூபாவாகும், ஆனால் ஒரு ஏக்கருக்கு 70 கன்றுகள் வீதம் முற்று முழுதாக விவசாயிகளின் காலடிக்குக் கொண்டு சென்று வழங்கி வருகின்றோம். 

இவ்வாறு விவசாயிகளுக்கு இலவசமாக நல்லின மரமுந்திரகைக் கன்றுகளை வழங்கி வைக்கும் நிகழ்வு புதன்கிழமை (18) போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் இடம்பெற்றது.

மரமுந்திரிகைச் செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு நாம் அனைத்து இலவச ஆலோசனைகளயும் வழங்கி வருகின்றோம், எனவே விவசாயிகள் மரமுந்திரிகைச் செய்கையில் ஈடுபட்டு அதிக இலாபத்தை பெற்றுக் கொள்ளலாம் என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு பிராந்தியக் காரியாலயத்தினூடாக இலவசமாக வழங்கி வரும் மரமுந்திரிகைக் கன்றுகளை விவசாயிகள் ஆர்வத்துடன் பயிரிட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

No comments:

Post a Comment