கொவிட் தொற்றால் வீதியில் இறந்து கிடக்கும் மக்கள்? உண்மைக்கு புறம்பான செய்தி என்கின்றார் சுகாதார அமைச்சின் பேச்சாளர் - News View

About Us

About Us

Breaking

Friday, November 13, 2020

கொவிட் தொற்றால் வீதியில் இறந்து கிடக்கும் மக்கள்? உண்மைக்கு புறம்பான செய்தி என்கின்றார் சுகாதார அமைச்சின் பேச்சாளர்

(எம்.மனோசித்ரா) 

"கொவிட் தொற்றால் மக்கள் வீதியில் இறந்து கிடப்பதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும்" என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்தியர் ஜயருவான் பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், கொரோனாவால் மக்கள் வீதியில் விழுந்து கிடப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் சில கருத்துக்கள் பகிரப்படுகின்றன. நாட்டில் தற்போது கொவிட் தொற்றால்தான் உயிரிழிக்கின்றார்களா என்பது பரிசோதனைகளின் மூலமே உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இதய நோய் அல்லது வேறு ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கூட வீதியில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக உயிரிழக்கக் கூடும். இவ்வாறு உயிரிழப்பவர்களின் பிரேத பரிசோதனைகள் நிறைவடையும் வரை கொவிட் தொற்று என்று கூற முடியாது.

ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான தொற்றாளர்கள் இனங்காணப்படுவது அபாயமான நிலைமையாகும். இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும் என்றார்.

No comments:

Post a Comment