வவுனியா நகர சபையின் வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்! - News View

Breaking

Post Top Ad

Thursday, November 19, 2020

வவுனியா நகர சபையின் வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!

வவுனியா நகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

வவுனியா நகர சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.

இதன்போது எதிர்வரும் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்தினை ஐக்கியத் தேசியக் கட்சியின் (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்) உறுப்பினர் எம்.லறீப் முன்மொழிய சுதந்திரக் கட்சி உறுப்பினரான ஜ.கனிஸ்டன் வழிமொழிந்திருந்தார்.

தமிழர் விடுதலை கூட்டணி வசம் இருக்கும் வவுனியா நகர சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad