மட்டக்களப்பில் மலையகத்தைப் போன்று பனி மூட்டம் - News View

About Us

About Us

Breaking

Friday, November 27, 2020

மட்டக்களப்பில் மலையகத்தைப் போன்று பனி மூட்டம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் வெள்ளிக்கிழமை 27.11.2020 அதிகாலை தொடக்கம் பனி மூட்டம் காணப்பட்டது.

இந்தப் பனி மூட்டம் வழமைக்கு மாற்றமாக மலையகத்தைப் போன்று படர்ந்திருந்ததைக் காண முடிந்தது.

சூரியன் உதயமாகி கதிர்கள் பரப்பியிருந்த போதும் பனி மூட்டம் காரணமாக இருள் கௌவி இருந்ததால் வாகனங்கள் முகப்பு வெளிச்சத்தைப் பாய்ச்சிக் கொண்டே பயணிக்க வேண்டியிருந்தது.

இந்தப் பனி மூட்டம் காலை 8 மணி வரை படர்ந்திருந்து மெல்ல மெல்ல அகன்றது.

No comments:

Post a Comment