நாட்டின் பல பகுதிகள் சமூக பரவலை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளன - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 11, 2020

நாட்டின் பல பகுதிகள் சமூக பரவலை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளன - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

பல பகுதிகள் சமூக பரவலை எதிர்கொள்ளும் ஆபத்தான நிலையில் உள்ளன என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகள் சமூக பரவலை எதிர்கொள்ளும் நிலையை அடைந்துள்ளன என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் பாலசூரிய தெரிவித்துள்ளார்.

கொத்தணிகளுடன் தொடர்பில்லாத நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படும்போதே சமூக பரவல் ஆரம்பமாகின்றது எனத் தெரிவித்துள்ள பாலசூரிய, அதிகாரிகள் அவ்வாறான நோயாளிகள் இனம் காணப்படவில்லை எனத் தெரிவித்தாலும் நாங்கள் நோய் தொற்று எங்கிருந்து பரவியது என்பது தெரியாத நோயாளிகளை எதிர்கொண்டுள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

குருநாகலில் இவ்வாறான நோயாளர்களை அடையாளம் கண்டுள்ளோம் என பொதுச் சுகாதார பரிசோதர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நோய் தொற்று எங்கிருந்து பரவியது என்பதை கண்டுபிடிக்க முடியாத நோயாளர்கள் அல்லது ஏற்கனவே காணப்படும் கொத்தணியுடன் தொடர்பற்ற நோயாளர்கள் இனம் காணப்பட்டால் மக்கள் மேலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து உரிய அதிகாரிகளுக்கு எச்சரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment