கொரோனா வைரஸை போன்று நாட்டின் பொருளாதார வைரசுக்கு என்ன தீர்வு, குடத்தை கிணற்றுக்குள் போடுவதால் வயிறு நிரம்பாது - சஜித் பிரேமதாச - News View

About Us

About Us

Breaking

Thursday, November 12, 2020

கொரோனா வைரஸை போன்று நாட்டின் பொருளாதார வைரசுக்கு என்ன தீர்வு, குடத்தை கிணற்றுக்குள் போடுவதால் வயிறு நிரம்பாது - சஜித் பிரேமதாச

கொரோனா வைரஸை போன்று பொருளாதார வைரசும் நிலவுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2020 ஒதுக்கீட்டு சட்டமூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

கொரோனா வைரஸை போன்று நாட்டில் உள்ள பொருளாதார வைரசுக்கு என்ன தீர்வு? நிவாரணம் வழங்குவதா? நாம் ஆரம்பத்தில் முன்வைத்த நிவாரண விடயங்களை அரசாங்கம் தவறானது என நிராகரித்தது. நான் ரூபா. 20,000 வழங்க வேண்டும் என்று முன்னர் தெரிவித்திருந்தது நினைவில் உள்ளது. இப்பொழுது அந்த விடயம் சரியானது என்பது உறுதியாகியுள்ளது. 

2 வார காலம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு அரசாங்கம் ரூபா. 10,000 நிவாரண பொதியை வழங்குகிறது. சரியாயின் 1 மாத காலம் தனிமைப்படுத்தப்படுவார்களாயின் ரூபா. 20,000 வழங்கப்பட வேண்டும். நான் அப்பொழுது ரூபா. 20,000 வழங்க வேண்டும் என்று தெரிவித்தேன். ஆனால் இன்று 2 வாரங்களுக்கு ரூபா. 10,000 வழங்கப்படுகிறது.

அரசாங்கம் யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். பிரதமர் அவர்களே குடத்தை கிணற்றுக்குள் போடுவதால் வயிறு நிரம்பப்போவதில்லை. குடத்தை அல்ல மனித மூளைகளை பயன்படுத்தி இப்பொழுது செயற்பட வேண்டிய நேரம். நெருக்கடியான இந்த சந்தர்ப்பதிலாவது அரசாங்கம் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

மக்கள் இன்று உணவு இன்றி, மருந்து இன்றி கஷ்ட நிலையை நோக்கி பயணிக்கின்றார்கள். மக்கள் நெருக்கடியில் இருக்கும் வேளையில் அரசாங்கம் 20 ஆவது திருத்தத்தை கொண்டு வந்து அதன் மூலம் பயனடைகின்றது. அரசாங்கம் தேர்தல் காலத்தில் குறிப்பிட்ட சில விடயங்களை இங்கு கூற விரும்புகின்றேன். சமயலறைக்கு சென்றால் அங்கு உணவு பொருட்கள் இல்லை என்று அப்பொழுது கூறியது 

வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதன் மூலம் மாத்திரம் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதியுடன் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து 1 வருட காலம் பூர்த்தியாகின்றது. 1 வருட காலத்துக்கான முன்னேற்ற அறிக்கையை பார்வையிடுவதன் மூலம் எதிர்வரும் 4 வருடங்களை எதிர்வு கூறுவதற்கு ஜோதிடர்கள் தேவையில்லை. அரசாங்கத்தின் சௌபாக்கிய தொலைநோக்கு திட்டத்திற்கு என்ன நடந்தது? என்பதை மக்கள் அறிவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment