நல்லாட்சியில் ஆயிரம் ரூபா பெற்றுக் கொடுக்க முடியாமல் போனவர்கள் தற்போது சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்றனர் - டிலான் பெரேரா - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 18, 2020

நல்லாட்சியில் ஆயிரம் ரூபா பெற்றுக் கொடுக்க முடியாமல் போனவர்கள் தற்போது சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்றனர் - டிலான் பெரேரா

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) 

நல்லாட்சி அரசாங்கத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க முடியாமல் போன எதிர்க்கட்சியில் இருக்கும் மலையக உறுப்பினர்கள் தற்போது சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்றனர் என ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதல்நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக 5 வருடங்களாக பேசினார்கள். எமது அரசு அதற்கான உடன்பாட்டை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதனையும் மலையத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ராதாகிருஷ்ணன் எம்.பி சந்தேகக் கண்கொண்டுதான் பார்க்கிறார். 

5 வருடங்களாக ஆயிரம் ரூபா சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்க கடந்த அரசு தவறியது. எமது அரசு சாதகமான யோசனையொன்றை முன்வைத்திருக்கின்றது. நிச்சயமாக அது வழங்கப்படும்.

அத்துடன் நான் பெருந்தோட்ட அமைச்சராக இருந்தபோது மலையகத்திற்கு பல்கலைக்கழகமொன்று தேவை என யோசனை முன்வைத்த ஒரே அமைச்சர் நான். அதற்கான ஆரம்ப அடித்தளம் தற்போது இடப்பட்டுள்ளது. ஆனால் எதிரணியினர் நாங்கள் பெயில் என்று கூறி வருகின்றனர்.

மேலும் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் செய்தபோது அவர்களுக்கு ஜனாதிபதி தொழில் வழங்கினார். குறைந்த வருமானம் பெறும் ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது வழங்கப்பட்டு வருகின்றது.

கொவிட் பிரச்சினை வந்த போது, அரசு இதனை கட்டுப்படுத்தாது என எதிரணி நினைத்தது. ஆனால் அரசு அதனை கட்டுப்படுத்தியது. எதிரணி எதிர்பாராதவற்றைத்தான் ஜனாதிபதி செய்தார். அதனால் எதிரணி தரப்பில் அவர்கள் பெயில். ஜனாதிபதி பாஸ் ஆகிவிட்டார் என்றார்.

No comments:

Post a Comment