யாசகம் பெறுவோர், வழங்குவோர், பொருட்களை கொள்வனவு செய்வோர் மீது சட்ட நடவடிக்கை - News View

Breaking

Post Top Ad

Thursday, November 19, 2020

யாசகம் பெறுவோர், வழங்குவோர், பொருட்களை கொள்வனவு செய்வோர் மீது சட்ட நடவடிக்கை

கொழும்பு மாநகர பகுதியிலும், அண்டியுள்ள பகுதிகளிலும் வீதி சமிக்ஞைகளில் யாசகம் பெறுவோரை கைது செய்வதற்கு இன்று தொடக்கம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், யாசகம் பெறுவோரில் பெரும்பாலானோர் உண்மையான யாசகம் பெறுவோர் அல்ல என்றும், அவ்வாறானோர் வர்த்தக நடவடிக்கைகளுக்காக இந்த தொழில் ஈடுப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இதனால் வீதி சமிக்ஞைகளுக்கு அருகாமையில் வீதிகளில் இடையூறு ஏற்படும் வகையில் நிறுத்தப்படும் வாகனங்கள் மூலம் யாசகர்களுக்கு பணம் வழங்குவோர் தொடர்பிலும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

புலனாய்வு பிரிவு மேற்கொண்ட விசாரணையில் இவர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையாக யாசகம் பெறுவோர் அல்ல என கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதில் வர்த்தக ரீதியான தொழில் நடவடிக்கையாக சிலர் ஈடுப்பட்டுள்ளனர். இவ்வாறானவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதேபோன்று வீதி சமிக்ஞைகளில் நிறுத்தப்படும் வாகன சாரதி, வாகனங்களில் பயணிப்பவர்கள் யாசகர்களுக்கு பணத்தை வழங்குவது மற்றும் பொருட்களை கொள்வனவு செய்வது தண்டனைக்குரியதாகும். இது வீதி விதிகளுக்கு எதிரானதால் அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

இதன் காரணமாக வீதி சமிக்ஞைகளில் வாகனங்களை நிறுத்தும் போது அவ்வாறான நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக்கூடாது. இவ்வாறு செய்வது வீதி, மோட்டார் வாகன விதிகளுக்கு முறணானதாகும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad