மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கிளினிக் நோயாளர்களுக்குரிய மருந்துகளை அவர்களது வீடுகளுக்கே சேர்ப்பிக்க நடவடிக்கை - News View

Breaking

Post Top Ad

Tuesday, November 3, 2020

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கிளினிக் நோயாளர்களுக்குரிய மருந்துகளை அவர்களது வீடுகளுக்கே சேர்ப்பிக்க நடவடிக்கை

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் நிலைமை காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தொடர்ச்சியாக மருந்துகளைப் பெற்றுக் கொள்ளும் கிளினிக் நோயாளர்களுக்குரிய மருந்துகளை நோயாளர்களின் வீட்டிற்கே கொண்டு சேர்ப்பிப்பதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிருவாகம் நடவடிக்கை எ:டுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்துடன் இணைந்து இந்த வேலைத் திட்டம் அமுலாகிறது.

இந்த சேவைக்காக திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணிவரை தங்களது பெயர் முகவரி தொலைபேசி இலக்கம் கிளினிக் இலக்கம் சிகிச்சையளிக்கும் வைத்திய நிபுணரது பெயர் நோயளர்கள் வசிக்கும் கிராம சேவையாளர் பிரிவு பிரதேச செயலளார் பிரிவு என்பனவற்றைத் தெளிவாகத் தெரிவித்து மருந்துகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நோயாளர்கள் தமக்கான மருந்துகள் முடிவடைந்ததும் வைத்தியசாலையின் 065 3133330 அல்லது 065 3133331 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு இந்த விவரங்களை வைத்தியசாலை நிருவாகத்திற்குத் தெரிவித்து தமக்கான மருந்துகளை வீடுகளிலிருந்தவாறே பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad