இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் மாணவர்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள் ! - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 4, 2020

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் மாணவர்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள் !

பாடசாலைகள் ஆரம்பிப்பது தாமதமாவதால் நாட்டில் ஏற்பட்டுள்ள அபாயகரமான நிலையை கருத்திற்கொண்டு கற்றல் நடவடிக்கைகளை வீட்டில் இருந்து மேற்கொள்ளுங்கள் எக்காரணம் கொண்டும் வெளி பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் வெளிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாடசாலைகள் ஆரம்பிப்பது தாமதமாவதால் நாட்டில் ஏற்பட்டுள்ள அபாயகரமான நிலையை கருத்தில் கொண்டு கற்றல் நடவடிக்கைகளை வீட்டில் இருந்து மேற்கொள்ளுங்கள், வெளியில் செல்லும் போது முகக்கவசம் இல்லாமல் பல மாணவர்கள் வெளியில் நடமாடுவது அவதானிக்கப்பட்டுள்ளது அது ஆபத்தானது. 

கல்வித் திணைக்களமும், பாடசாலைகளும் வழிப்படுத்தும் இணையவழியிலும், தொலைக்காட்சியூடாகவும், நடைபெறும் கற்றல் செயற்பாடுகளில் இணைந்திருங்கள். 

தாய், தந்தையருக்கு அசௌகரியங்களைக் கொடுக்காது. உங்கள் பாடசாலை அதிபர், ஆசிரியர்களோடு தொடர்பைப் பேணி பாடரீதியிலான தெளிவைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

இவ்வருடம் க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் பரீட்சைக்கு ஆயத்தமாக வேண்டுமென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் மாணவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment