வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காத்தான்குடி ஹோம் புட் சிட்டி உரிமையாளர் தலைமையில் கோதுமை மா கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 18, 2020

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காத்தான்குடி ஹோம் புட் சிட்டி உரிமையாளர் தலைமையில் கோதுமை மா கையளிப்பு

எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளான மற்றும் சுயதனிமைப்படுத்தலில் வாழும் நபர்களுக்காக கோறளைப்பற்று மத்தி மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கு 2750 கிலோ கிராம் கோதுமை மா கையளிக்கப்பட்டது.

காத்தான்குடி ஹோம் புட் சிட்டி உரிமையாளர் தலைமையில் கோறளைப்பற்று மத்தி பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐந்து கிலோ பெறுமதியான 300 கோதுமை மா பைகள் பிரதேச செயலாளர் எம்.எஸ்.முஸம்மிலிடம் கையளிக்கப்பட்டது.

அத்தோடு ஓட்டமாவடி பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐந்து கிலோ பெறுமதியான 250 கோதுமை மா பைகள் பிரதேச செயலாளர் வி.தவராஜாவிடம் இன்று புதன்கிழமை கையளிக்கப்பட்டது.

கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ரி.எம்.றிஷ்வி மஜீதி ஊடாக டார்லி புட்லர், லங்கா மில்க் புட், செரண்டிப் புளோர் ஆகிய நிறுவனங்களின் ஏக வினியோகஸ்தர் காத்தான்குடி ஹோம் புட் சிட்டி உரிமையாளர்களால் ஐந்து கிலோ பெறுமதியான கோதுமை மா பைகள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், செயலக கணக்காளர் அஹமட் சஜ்ஜாத், செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.அஸ்ரப், கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ரி.எம்.றிஷ்வி மஜீதி, செயலக உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள், வினியோகஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment