கண்டி, போகம்பறை சிறைக் கைதிகள் கூரையில் ஏறி போராட்டம் - PCR மேற்கொள்ளவும் இன்றேல் வேறு சிறைக்கு மாற்றவும் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 11, 2020

கண்டி, போகம்பறை சிறைக் கைதிகள் கூரையில் ஏறி போராட்டம் - PCR மேற்கொள்ளவும் இன்றேல் வேறு சிறைக்கு மாற்றவும்

கண்டி, போகம்பறையிலுள்ள பழைய சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர், சிறைச்சாலையின் கூரையின் மீதேறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்களுக்கும் PCR பரிசோதனை மேற்கொள்ளுமாறு கோரியே அவர்கள் இவ்வாறு போராட்டம் நடத்தி வருகின்றனர்

கொவிட்-19 வைரஸ் காரணமாக கண்டி போகம்பறை பழைய சிறைச்சாலைக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ள 30 இற்கும் மேற்பட்ட கைதிகளினால் தற்பொழுது அங்கு தங்கியுள்ள ஏனைய கைதிகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, சுமார் 100 இற்கும் மேற்பட்ட கைதிகள் இன்று (12) காலை முதல் கூரையில் ஏறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பல்வேறு குற்றச்சாட்டுக்களில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட, சுமார் 800 பேர், சிறைச்சாலை திணைக்களத்தின் கட்டுப்பாட்டில், கண்டியிலுள்ள பழைய போகம்பறை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு, கொவிட்-19 வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள முப்பது கைதிகள் உள்ளனர் எனவும், தங்களில் பலருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ப்படவில்லை எனவும், அவ்வாறு தங்களின் பரிசோதனைகள் விரைவுபடுத்தப்படாவிட்டால், தங்களை வேறு சிறைக்கு மாற்றுமாறு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கண்டி பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சுதத் மாசிங்கவிடம் விசாரித்த பொழுது, தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்ட இந்தக் கைதிகள் ஒன்றாக சேர்ந்துள்ளதால், கொரோனா வைரஸ் மேலும் பரவும் அபாயம் உள்ளது எனவும், மேலும் தற்போதைய நிலைமைகளை சீர் செய்ய அவர்கள் அனைவருக்கும் PCR சோதனைகளை மேற்கொள்ள துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

(எம்.ஏ. அமீனுல்லா)

No comments:

Post a Comment