கொரோனா வராமல் தடுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் மருந்தினை காத்தான்குடி ஆயுர்வேத வைத்திய பாதுகாப்புச் சபை தயாரித்தது - News View

Breaking

Post Top Ad

Wednesday, November 11, 2020

கொரோனா வராமல் தடுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் மருந்தினை காத்தான்குடி ஆயுர்வேத வைத்திய பாதுகாப்புச் சபை தயாரித்தது

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி ஆயுர்வேத வைத்திய பாதுகாப்புச் சபையினால் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஆயுர்வேத மருந்தொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆயுர்வேத திணைக்களம் ஆயுர்வேத பாதுகாப்புச் சபையின் அனுமதியுடனும் அவர்களின் வழ்காட்டலுடனும் இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்தினை அறிமுகம் செய்து காத்தான்குடி பிரதேச செயலாளருக்கு கையளிக்கும் வைபவம் இன்று (11.11.2020) புதன்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி ஆயுர்வேத வைத்திய பாதுகாப்புச் சபையின் தலைவர் பாரம்பரிய ஆயுர்வேத வைத்தியர் ஏ.எல்.எ.அஸீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயசிறீதர், காத்தான்குடி பிரதேச உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர் திருமதி ஜாயிதா ஜலால்தீன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி பத்மா ஜெயராஜ் உட்பட காத்தான்குடி ஆயுர்வேத பாதுகாப்புச் சபையின் செயலாளர் பொருளாளர் உள்ளிட்ட நிருவாகிகளும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது முதலாவது மருந்தினை காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதரிடம் காத்தான்குடி ஆயர்வேத வைத்திய பாதுகாப்புச் சபையின் தலைவர் ஆயுர்வேத வைத்தியர் ஏ.எல்.எ.அஸீஸ் கையளித்தார். 

இதையடுத்து நிகழ்வில் கலந்துகொண்ட ஏனையோருக்கும் இந்த மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டன.

No comments:

Post a Comment

Post Bottom Ad