மேல் மாகாணத்திற்கான பொது போக்குவரத்து முடக்கம்! - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 11, 2020

மேல் மாகாணத்திற்கான பொது போக்குவரத்து முடக்கம்!

மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து பேருந்து சேவைகளும் இன்று முதல் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும், இலங்கை போக்கு வரத்து சபையும் இதனை அறிவித்துள்ளன.

இன்று நள்ளிரவு முதல் அனைத்து பேருந்து சேவைகளும் இடைநிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை இடைநிறுத்தம் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்துகள் மாகாண எல்லை வரை இயங்கும் என தெரிவித்துள்ள அதிகாரிகள் மேல் மாகாணத்திற்குள் வழமை போல பேருந்து சேவைகள் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இன்று (11) இரவு 10.00 மணி முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை ரயில்களில் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும், மேல் மாகாணத்தில் இருந்து வௌியேற அனுமதி வழங்கப்படவில்லை என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, கீழ் காணும் வகையில் ரயில் போக்குவரத்து இடம்பெறும் என ரயில்வே திணைக்களத்தினால் ரயில் பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பெலியத்த, கண்டி, மஹவ, புத்தளம், அவிசாவளை ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் ரயில்கள் மற்றும் குறித்த வீதிகளில் பயணிக்கும் ஏனைய ரயில்கள் 2020.11.12 ஆம் திகதி முற்பகல் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை அடைய அனுமதி உள்ளது.

பிற்பகல் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு மேல் மாகாணத்தினுள் அமைந்துள்ள இறுதி ரயில் நிலையமான அழுத்கம, அம்பேபுஸ்ஸ, கொச்சிகடே, அவிசாவளை வரை கொழும்பில் இருந்து பயணிக்கு அனுமதி உள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment