முல்லைத்தீவு மாவட்டத்தில் 500 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை - 3 தனிமைப்படுத்தல் மையங்கள் மூடப்பட்டுள்ளது : வைத்தியர் காண்டீபன் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 5, 2020

முல்லைத்தீவு மாவட்டத்தில் 500 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை - 3 தனிமைப்படுத்தல் மையங்கள் மூடப்பட்டுள்ளது : வைத்தியர் காண்டீபன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆறு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இருந்தும் 500 பேருக்கு மேல் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸினுடைய தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மையில் இருவர் இனங்காணப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கொரோனா வைரஸ் உடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளும் பி.சி.ஆர். சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கின்ற ஆறு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இருந்து 500 பேருக்கு மேல் இதுவரையில் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற கொரோனா வைரஸ் நிலமைகள் தொடர்பான விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை தளம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட படைத் தலைமையகத்தின் கீழ் இருக்கின்ற இராணுவ பயிற்சி முகாம் புதுக்குடியிருப்பு 68 ஆவது படைப்பிரிவின் திம்பிலி பகுதியில் இருக்கின்ற இராணுவ பயிற்சி முகாம் ஆகியவற்றில் இயங்கிய 3 தனிமைப்படுத்தல் மையங்களும் மூடப்படுகின்றது என்பதையும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பு உடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் உள்ளவர்களை தற்போது வீடுகளில் தனிமைப்படுத்துகின்ற நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதன் பின்னணியில் இந்த மூன்று தனிமைப்படுத்தல் மையங்களும் மூடப்படுகின்றது என்பதும் இது எவ்வாறு மாற்றப்பட வேண்டும் என்பது தொடர்பான அறிவித்தல்கள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்று மாலை வெளியான தகவல்களின் அடிப்படையில் இதுவரை முல்லைத்தீவு மாவட்டத்தில் 222 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment