தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 47 பேர் வீடு திரும்பினர் - இதுவரை 592,218 PCR பரிசோதனைகள் - News View

Breaking

Post Top Ad

Sunday, November 8, 2020

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 47 பேர் வீடு திரும்பினர் - இதுவரை 592,218 PCR பரிசோதனைகள்

முப்படையினரால்‌ நிர்வகிக்கப்படும்‌ தனிமைப்படுத்தல்‌ நிலையங்களிலிருந்து இன்று (08) 47 பேர் தமது‌ வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக‌, கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பூவரசங்குளம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் 45 பேரும், திக்வெல்ல ரிசோர்ட்டிலிரந்து 02 பேரும் என 47 பேரும் இன்று வீடு திரும்புகின்றனர்.

அத்துடன் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள 28 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தற்போது 2,454 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அத்துடன், நேற்றையதினம் (07) மாத்திரம் 11,620 PCR சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதுவரை இலங்கையில் 592,218 PCR சோதனைகள் மேற்கொள்ளபட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

நேற்றையதினம் (07) கல்கிஸ்ஸை ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர், தனது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து வீடு திரும்பியதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad