பி.சி.ஆர்.பரிசோதனையை புறக்கணிப்போர், அவர்களுக்கு உதவுவோருக்கு 3 வருடங்கள் சிறை : பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண - News View

Breaking

Post Top Ad

Monday, November 30, 2020

பி.சி.ஆர்.பரிசோதனையை புறக்கணிப்போர், அவர்களுக்கு உதவுவோருக்கு 3 வருடங்கள் சிறை : பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண

(செ.தேன்மொழி)

பி.சி.ஆர். பரிசோதனைகளை புறக்கணிப்பவர்களையும் அவர்களுக்கு உதவுபவர்களுக்கும் 3 வருட சிறைத் தண்டனை வழங்க முடியும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்தோடு தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறுபவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கொவிட் தொற்றைக் கண்டறிவதற்காக பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்குமாறு அறிவித்துள்ள சிலர் அதனை புறக்கணித்து வருவதாகவும், அவ்வாறானவர்களுக்கு சிலர் உதவுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இத்தகைய நபர்கள் தொடர்பில் தகவல்களை திரட்டி பீ அறிக்கை தயாரித்து அதனை நீதிமன்றத்தில் சமர்பிக்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதன்போது அவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதேவேளை இந்த நபர்களுக்கு இணையத்தின் ஊடாக உதவி ஒத்துழைப்புகளை வழங்கிவரும் நான்கு நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இவர்கள் அனைவருக்கும் எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்பு சட்ட விதிகளுக்கமைய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இதன்போது குற்றம் நிரூபிக்கப்படும் இரு தரப்பினரையும் மூன்று வருடங்கள் வரை சிறை வைக்கவும் முடியும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad