2ஆவது முறை நடத்தப்பட்ட பரிசோதனையிலும் உக்ரைன் ஜனாதிபதிக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Thursday, November 19, 2020

2ஆவது முறை நடத்தப்பட்ட பரிசோதனையிலும் உக்ரைன் ஜனாதிபதிக்கு கொரோனா

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கிக்கு (Volodymyr Zelenskiy)  இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட பரிசோதனையிலும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் சுமார் 203 நாடுகளில் வியாபித்துள்ளது. இந்த நோய்த் தொற்று உலகம் முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. 

இந்த நோயினால் உலகத் தலைவர்களும், அமைச்சர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் என மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இதற்கிடையே, உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கிக்கு (Volodymyr Zelenskiy)  (42) கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு கீவ் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், 2ஆவது முறையாக அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு மறுபடியும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதை அவரே ‘டெலிகிராம்’ சமூக வலைத்தளத்தில் நேற்று உறுதி செய்தார். அதே நேரத்தில் அவர் நலமாக உள்ளதாக தெரிவித்துள்ள அவர், தனது பலம் திரும்பி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment