273 பொலிஸாருக்கு இதுவரை கொரோனா - STF முகாம்கள் 3 இற்கு பூட்டு - News View

About Us

About Us

Breaking

Thursday, November 5, 2020

273 பொலிஸாருக்கு இதுவரை கொரோனா - STF முகாம்கள் 3 இற்கு பூட்டு

நாடெங்கிலும், பரவிவரும், கொரோனா தொற்றால் 273 பொலிஸ் அதிகாரிகள் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

நாட்டில் மொத்தம் 273 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. 

இவற்றுள் மேல் மாகாணத்தில் 180 பொலிஸார் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதேவேளை 257 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் 1,302 பொலிஸ் அதிகாரிகள் சுய தனிமைப்படுத்தலிலும் உள்ளனர். 

நேற்றைய தினத்தில், பொரளையை அண்மித்த பகுதிகளில் 41 பொலிஸ் அலுவலர்களுக்கும், பொரளை பொலிஸ் நிலையத்தில் மாத்திரம் 56 அதிகாரிகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூன்று பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கிணங்க களனி, களுபோவில மற்றும் ராஜகிரிய பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம்களே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதுவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் 56 பேர் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 273 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment