நவீன சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய வகையில் இராணுவத்தின் 15 வது ட்ரோன் ரெஜிமென்ட் உருவாக்கம் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 12, 2020

நவீன சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய வகையில் இராணுவத்தின் 15 வது ட்ரோன் ரெஜிமென்ட் உருவாக்கம்

(நா.தனுஜா)

நவீன சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய வகையில் இராணுவம் தன்னை பல்வேறு வகையிலும் புதுப்பித்து வருகின்றது. அதன் அடுத்த கட்டமான 15 வது ட்ரோன் ரெஜிமென்ட் என்ற புதிய பிரிவை இராணுவம் உருவாக்கியிருக்கிறது.

இதன் அறிமுக நிகழ்வு இன்று வியாழக்கிழமை இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவக் கட்டமைப்பில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் தொடர்பில் விசேடமாக சுட்டிக்காட்டினார். 

போர் நிலைமைகள், இயற்கை அனர்த்தங்கள், மனிதனால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்கள், விசேட அவசர நிலைமைகள், இரசாயனப் போர் அவதான நிலை, கொரோனா வைரஸ் போன்ற தொற்றுப் பரவல் நிலைமைகள் ஆகிய சந்தர்ப்பங்களில் தொழில்நுட்பத்தின் தேவை உயர்வாகக் காணப்படுவது பற்றியும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் 15 வது ட்ரோன் ரெஜிமென்ட் பிரிவில் உள்வாங்கப்பட்டிருக்கும் ட்ரோன் இயந்திரங்களைப் பார்வையிட்ட இராணுவத் தளபதி, முதற்தடவையாக அதன் செயற்பாடுகளை ஆரம்பித்து வைக்கும் வகையில் ட்ரோன் இயந்திரமொன்றையும் இயக்கினார்.

இந்நிகழ்வில் மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன உள்ளிட்ட பல்வேறு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment