நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு எனும் பேச்சுக்கே இடமில்லை - 05 மாதங்களுக்கு கையிருப்பு, வதந்திகளுக்கு அமைச்சர் மஹிந்தானந்த மறுப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, November 28, 2020

நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு எனும் பேச்சுக்கே இடமில்லை - 05 மாதங்களுக்கு கையிருப்பு, வதந்திகளுக்கு அமைச்சர் மஹிந்தானந்த மறுப்பு

நாட்டில் அரிசிக்கு எந்தவொரு தட்டுப்பாடுகளும் கிடையாதென விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். அதன்படி நெல் சந்தைப்படுத்தல் களஞ்சியத்தில் அடுத்த ஐந்து மாதங்களுக்கு போதுமான அரிசி கையிருப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய சூழலில் அரிசிக்கு தட்டுப்பாடுகள் இருக்கின்றதா? என அமைச்சரிடம் கேட்டபோதே அமைச்சர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்தும் கூறுகையில் நெல் சந்தைப்படுத்தல் களஞ்சியத்தில் 3,00,000 மெட்ரிக் தொன் நெல் இருப்பதாகவும் இதனால் அரிசிக்கு எந்தவொரு பற்றாக்குறையும் கிடையாதெனவும் குறிப்பிட்டார். 

இந்த வகையில் நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு இருப்பதாக சிலரினால் வெளிக்கொணரும் வதந்திகளில் எந்தவொரு உண்மைத்தன்மையும் கிடையாதெனவும் இதனை மக்கள் நம்பக்கூடாதெனவும் அமைச்சர் மக்களை கேட்டுக்கொண்டார் .

மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் உருவாக்கப்பட்டுள்ள நாட்டின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தில் நாட்டை தன்னிறைவு பெற்றுக் கொள்ளும் வகையில் பல பயிர்களை உற்பத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளன. இந்த விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் மக்கள் பல நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியுமெனவும் குறிப்பிட்டார்.

நம் நாட்டிற்கு தேவையான 95% உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் மிளகாய் தற்போது இறக்குமதி செய்யப்படுகின்றன, ஜனவரி 2024 க்குள் இவை எதுவும் இறக்குமதி செய்யப்படமாட்டாது, அவையெல்லாம் நம் சொந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

எம்.ஏ.அமீனுல்லா

No comments:

Post a Comment