மருந்தக அனுமதிப் பத்திரத்தை அவசரகால அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த அனுமதி - News View

Breaking

Post Top Ad

Thursday, October 29, 2020

மருந்தக அனுமதிப் பத்திரத்தை அவசரகால அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த அனுமதி

பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் ஆலோசனைக்கு அமைய தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் அந்த பிரதேசத்தில் தமது மருந்தக அனுமதிப் பத்திரத்தை அவசரகால அனுமதிப் பத்திரமாக பயன்படுத்தி வீடுகளுக்கு சென்று மருந்துகளை விநியோகிப்பதற்காக தேசிய ஒளடதங்கள் ஒழுங்குறுத்தல் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் சிரமங்கள் இன்றி பொதுமக்களுக்கு மருந்து வகைகளை வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த அனுமதி வழங்கப்படுகின்றது.

அத்தோடு தனிமைப்படுத்தல் சுகாதார சட்டம் மற்றும் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குறுத்தல் அதிகார சபையின் வழிக்காட்டலுக்கு அமைவாக செயல்படுமாறு தேசிய மருந்தகங்கள் ஒழுங்குறுத்தல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகமும், பிரதான செயற்பாட்டு அதிகாரியுமான வைத்தியர் கமல் ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad