மருத்துவமனையின் தலைமை அதிகாரியை அச்சுறுத்திய இராணுவ அதிகாரி - சேவையிலிருந்து விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, October 29, 2020

மருத்துவமனையின் தலைமை அதிகாரியை அச்சுறுத்திய இராணுவ அதிகாரி - சேவையிலிருந்து விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு

வடக்கு மாகாணத்தின் சம்பத்நுவர பிரதேச வைத்தியசாலை சேவையிலிருந்து தாம் விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிரிகேடியர் கே.கே.எஸ்.பரகும் குறித்த வைத்தியசாலையின் வைத்தியரை மிரட்டியதன் விளைவாகவே தாம் இந்த முடிவை எடுத்ததாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வெலிஓயாவில் உள்ள சம்பத்நுவர மாவட்ட வைத்தியசாலையின் தலைமை அதிகாரியை இராணுவ அதிகாரியொருவர் அச்சுறுத்தியுள்ளார் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இராணுவ அதிகாரி தகாத வார்த்தைகளை பிரயோகித்து மருத்துவமனையின் தலைமை அதிகாரியை நிந்தனை செய்தார் என குறிப்பிட்டுள்ளது.

கே.கே.எஸ். பரகும் என்ற பிரிகேடியர் தர அதிகாரிக்கு எதிராகவே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது.

இதன் காரணமாக மருத்துவமனையின் பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ள வைத்திய அதிகாரிகள் சங்கம் வைத்தியசாலையின் பணிகளில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளது.

யுத்த காலத்தின் போது பயங்கரவாதத்திற்கு எதிராக போராடிய படையினர் பொலிஸாரிற்கு உளவியல் ரீதியான மருத்துவ ஆதரவை வழங்குவதற்காக மருத்துவர்கள் படைத்தரப்பினரை கௌரவத்துடன் நடத்தினார்கள் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் குறிப்பிட்ட அதிகாரி தனது நடத்தைகள் மூலம் படைத்தரப்பிலிருந்து எதிர்பர்ர்க்கப்படும் நடத்தையின் தராதரத்தை எட்டத்தவறிவிட்டார் என மருத்துவர்கள் மக்களின் கௌரவத்தை உறுதி செய்ய தவறிவிட்டார் என அரச மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தாம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment