அகரம் கல்வி நிலையத்தில் சிறுவர் தின கொண்டாட்டமும், சகோதரர் பைரூஸின் சத்திர சிகிச்சை நிதி கையளிப்பும் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 1, 2020

அகரம் கல்வி நிலையத்தில் சிறுவர் தின கொண்டாட்டமும், சகோதரர் பைரூஸின் சத்திர சிகிச்சை நிதி கையளிப்பும்

மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் சமூக சேவையை நோக்காக கொண்டு இயங்கி வரும் பிரபல கல்வி நிறுவனமான செம்மண்ணோடை அகரம் கல்வி நிலையத்தில் 01.10.2020 வியாழக்கிழமை இன்று சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வு இடம்பெற்றது. 

இதன்போது இரு சிறுநீரகங்களும் பாதிப்புற்ற நிலையில் சத்திர சிக்ககைக்கான நிதிப்பற்றாக் குறையால் போராடி வரும் சகோதரர் பைரூஸ் அவர்களுக்கு உதவும் நோக்கில் மாணவர்கள் தானாக முன் வந்து ஊன்டியல் அமைத்து சிறு சிறு தொகையாக தங்களால் முடிந்த நிதியினை சேமித்தனர். 

குறித்த ஊன்டியல் இதன்போது இந்நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளால் மாணவர்கள் முன்னிலையில் உடைக்கப்பட்டு அதில் உள்ள பணத்தின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு பின்னர் பைரூஸ் அவர்களின் மகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் இதன்போது மாணவர்களால் இஸ்லாமிய மற்றும் கலை நிகழ்சிகளும் சிங்களப் போட்டி நிகழ்சியும் கரம் விளையாட்டும் இடம்பெற்றதோடு அதிதிகளால் அனைத்து மாணவர்களுக்கும் பேனை மற்றும் இனிப்புப் பண்டங்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

அகரம் கல்வி நிலையத்தின் பணிப்பாளரும், கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினருமான ஏ.எல்.ஏ. கபூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மொடர்ன் டைலர்ஸ் உரிமையாளரும் மீரா விளையாட்டு கழக தலைவருமான ஐ.எம். றிஸ்வின் கலந்துகொண்டார். 

அத்துடன், கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களான யூ.எல். தஸ்லிம், எம்.பீ.எம். சாஜிலூன், பீ.எம். சுல்பிகான், எம்.எஸ்.எஸ். சுமையா, ஜெ. றிஸ்மியா ஆகியோரும் கலந்து கொண்டனர். 

தகவல் 
எம் வை பயாஸ்

No comments:

Post a Comment