கோப்பாய் கல்வியியல் கல்லூரி கொரோனா வைத்தியசாலையாக மாற்றம் - இடநெருக்கடியைத் தீர்க்க அவசர நடவடிக்கை - News View

Breaking

Post Top Ad

Wednesday, October 28, 2020

கோப்பாய் கல்வியியல் கல்லூரி கொரோனா வைத்தியசாலையாக மாற்றம் - இடநெருக்கடியைத் தீர்க்க அவசர நடவடிக்கை

யாழ்ப்பாணம் கோப்பாய் கல்வியல் கல்லூரி கொரோனா தடுப்பு வைத்தியசாலையாக மாற்றப்படவுள்ளது. இதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா நோயாளார் தொகை அதிகரிக்கும் நிலையில் வைத்தியசாலைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் மருதங்கேணியில் ஒரு வைத்தியசாலை அமைக்கப்பட்ட நிலையில் மற்றுமோர் வைத்தியசாலை அவசியமாகியிருப்பதாலேயே கோப்பாய் கல்வியல் கல்லூரியும் மாற்றப்படவுள்ளது.

தற்போது கல்வியல் கல்லூரியில் இயங்கும் கொரோனாத் தடுப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 217 பேரும் நாளை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு கட்டடம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

அவ்வாறு கையளிக்கப்படும் கட்டடத்தின் மாணவர்கள் விடுதி வைத்தியர்கள் விடுதியாகவும் கல்விக் கூடம் வைத்தியசாலையாகவும் மாற்றப்படவுள்ளதனை வைத்திய அதிகாரிகள் உறுதி செய்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad