வைத்திய ஆராய்ச்சி நிறுவன ஊழியர்களுக்கு அதிக பளு : நிறுவனத் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 10, 2020

வைத்திய ஆராய்ச்சி நிறுவன ஊழியர்களுக்கு அதிக பளு : நிறுவனத் தலைவர்

வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் (MRI) மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர்கள் கொவிட்-19 பி.சி.ஆர். பரிசோதனைகளின் அதிக எண்ணிக்கையான மாதிரிகளை தாம் பெற்றுள்ளதாக மருத்துவ ஆய்வக விஞ்ஞான கல்லூரியின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

வாழைத்தோட்டம், வெலிசற கடற்படை முகாம், கந்தகாடு புனர்வாழ்வு மையம் மற்றும் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் என அனைத்து கொத்தணிகளிலும் இருந்து பெற்ற பி.சி.ஆர். பரிசோதனைகளை நிர்வகிக்க வேண்டியுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை நோயாளர்களின் பயண வரலாறு கண்டறியப்பட்டு அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

தனிமைப்படுத்தப்பட்டவர்களிடமிருந்து வைரஸ் அறிகுறிகள் தென்பட்டவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“எவ்வாறாயினும் பி.சி.ஆர். பரிசோதனையின் அளவை எதிர்கொள்ள வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தயாராக இல்லை. ஏனெனில் அதன் வளங்களை வலுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. எமது நிறுவனமானது கிடைக்கத்தக்க பாரம்பரிய முறையுடனேயே இன்னமும் செயற்படுகிறது. 

இவ்வாறான மொத்த அளவிலான மாதிரிகளின்போது அவற்றைச் சமாளிக்க எந்தவித தொழில்நுட்பமும் கிடைக்கவில்லை. தற்போது பி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவுகளை அறிய ஆகக்குறைந்தது 5 மணித்தியாலங்கள் செல்கின்றன” என்றார்.

தினக்குரல்

No comments:

Post a Comment