சீனாவின் இலக்கு வேறாக இருக்கலாம், எனினும் எமது இலக்கு இதுதான் - அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 28, 2020

சீனாவின் இலக்கு வேறாக இருக்கலாம், எனினும் எமது இலக்கு இதுதான் - அமெரிக்க இராஜாங்கச் செயலாளர்

(நா.தனுஜா)

அமெரிக்காவிற்கும், இலங்கைக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துவதோடு இலங்கையின் இறையாண்மை, சுயாதிபத்தியம் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி என்பவற்றை உறுதிப்படுத்துவதே எனது விஜயத்தின் நோக்கமாகும். சீனாவின் இலக்கு வேறாக இருக்கலாம். எனினும் எமது இலக்கு இதுவேயாகும் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்திருக்கிறார்.

அத்தோடு இலங்கை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் ஒரு நாடு என்று சுட்டிக்காட்டியிருக்கும் அவர் நீதி வழங்கல், பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியவை தொடர்பில் அரசாங்கம் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இன்று புதன்கிழமை காலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடிதைத் தொடர்ந்து, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவையும் சந்தித்தார்.

அதனைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு தனது விஜயத்தின் நோக்கம் மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கேள்வி: அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நீங்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருப்பதற்கான காரணம் என்ன? இலங்கையுடன் இணைந்து சீனாவிற்கு எதிரான கூட்டணியொன்றை உருவாக்குவதற்கான முயற்சியாக இதனைக் கருத முடியுமா?

பதில்: நான் ஏற்கனவே கூறயதைப் போன்று இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். அத்தோடு இலங்கையின் இறையாண்மை, சுயாதிபத்தியம் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி என்பவற்றை உறுதிப்படுத்துவதும் எமது நோக்கமாகும். சீனாவின் இலக்கு வேறாக இருக்கலாம். எனினும் எமது இலக்கு இதுவேயாகும்.

கேள்வி: இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்தத் தடையை நீக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. இதன் தற்போதைய நிலைவரம் என்ன?

பதில் : இந்த நடைமுறைகள் ஓர் ஒழுங்கின் அடிப்பையிலேயே முன்னெடுக்கப்படும்.

No comments:

Post a Comment