“மட்டுநகரின் இன்னுமொரு பக்கம்” நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை - News View

About Us

About Us

Breaking

Thursday, October 1, 2020

“மட்டுநகரின் இன்னுமொரு பக்கம்” நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

“மட்டுநகரின் இன்னுமொரு பக்கம்” நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை 03.10.2020 8.30 மணிக்கு மட்டக்களப்பு செல்வநாயகம் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் பந்நெடும்காலமாக இலக்கிய நூல்களை எழுதியும் அரங்கம் எனும் சஞ்சிகையை வெளியிட்டும் வருபவரான இலக்கியவாதி கலாபூசணம் அரங்கம் இரா. தவராஜா இந்நூலை எழுதியுள்ளார்.

அரை நூற்றாண்டுக்கு முன்னர் மட்டக்களப்பில் காணப்பட்ட சமூக மக்களின் வாழ்வியல் முறைமைகளையும் கலாசார பாரம்பரிய விழுமியங்களையும் இந்நூலில் இவர் உயிரோட்டமாக உள்ளடக்கியுள்ளார் என்று இலக்கிய ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தன்னுடைய நூலுக்கூடாக பழங்கால மக்களின் வாழ்வியல் முறைமைகளை தற்காலத்து மக்களுக்கு பிரதிபலித்துக்காட்டுகின்ற காலக் கண்னாடியாக இந்நூலை அவர் எழுதியுள்ளார் என்றும் ஆரவலர்கள் குறிப்பிடுகின்றனர்.

கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலமை தாங்கும் நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக பேராசிரியர் சி. மௌனகுரு விசேட அதிதியாக கனடா பாடுமீன் கழக செயலாளர் சீ. முருகமூர்த்தி மட்டக்களப்பின் வர்த்தகப் பிரமுகரும் சமூக செயற்பாட்டாளருமான முஹம்மத் கலீல் உட்பட இலக்கிய ஆர்வலர்களும் ஐக்கிய சமாதான செயற்பாட்டாளர்களும் பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment