கொரோனா நோயாளர்கள் அதிகரித்து வருவதையிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் தொடர்ந்தும் மனிதாபிமான உதவிகள் - News View

Breaking

Post Top Ad

Thursday, October 29, 2020

கொரோனா நோயாளர்கள் அதிகரித்து வருவதையிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் தொடர்ந்தும் மனிதாபிமான உதவிகள்

மட்டக்களப்பில் கொரோனா நோயள்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையிட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான மனிதாபிமான உதவிகள் தொடர்ந்தும் மாவட்ட செயலகத்தினால் பெற்றுக் கொடுக்க மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திரு. கே. கருணாகரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சிணி ஸ்ரீகாந்தின் ஒருங்கிணைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டுவரும் லிப்ட் தன்னார்வுத் தொண்டு நிறுவனால் சுமார் 40 ஆயிரம் ரூபா பெறுமதியான 40 உலர் உணவுப் பொதிளை கையளிக்கும் நிகழ்வு மாவட்ட செயலகத்தில் இன்று (29) இடம்பெற்றது.

கொரோனா தொற்று காரணமாக கோரளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி மற்றும் மன்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நோக்கில் லிப்ட் அமைப்பின் பொதுச் செயலாளர் திருமதி. ஜானு முரலிதரனினால் இவ் உலர் உணவுப் பொதிகள் மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரனிடம் கையளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad