ஆர்மேனியா - அசர்பைஜான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தத்திலும் மோதல் - News View

About Us

About Us

Breaking

Monday, October 12, 2020

ஆர்மேனியா - அசர்பைஜான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தத்திலும் மோதல்

ஆர்மேனியா - அசர்பைஜான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் ஒன்று ஏற்பட்டு சில மணி நேரத்திலேயே சர்ச்சைக்குரிய நகொர்னோ கரபக் பிராந்தியத்தில் செல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த பிராந்தியத்தின் தலைநகரான ஸ்டெபனகார்ட் மீதே கடந்த சனிக்கிழமை மாலை குண்டுகள் விழுந்ததாக பார்த்தவர்கள் மற்றும் ஆர்மேனிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஏனைய பகுதிகளிலும் தொடர்ந்து குண்டு வீச்சுகள் இடம்பெற்று வருவதாக முன்னதாக இரு தரப்பும் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன.

இரு தரப்புக்கும் இடையே கடந்த இரண்டு வாரங்களாக மோதல்கள் இடம்பெற்று வந்த நிலையில் மொஸ்கோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை தற்காலிக போர் நிறுத்தம் ஒன்று அமுலுக்கு வந்தது.

இந்த பலவீனமான போர் நிறுத்தத்தில் இரு நாடுகளும் கைதிகள் பரிமாற்றங்களில் ஈடுபடவும் போரில் இறந்த உடல்களை மீட்கவும் அனுமதிக்கப்படுகிறது.

இந்த புதிய மோதல்களில் 300 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதோடு ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

அசர்பைஜான் நாட்டுக்குள் இருக்கும் நகொர்னோ கரபக் பிராந்தியம் ஆர்மேனிய இனத்தவர் கட்டுப்பாட்டில் இருப்பதுவே பிரச்சினைக்குக் காரணமாகும்.

No comments:

Post a Comment