நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோரே சமீபத்திய கொரோனா தொற்றாளர்கள் - வைத்திய நிபுணர் சுதத் சமரவீர - News View

About Us

About Us

Breaking

Thursday, October 29, 2020

நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோரே சமீபத்திய கொரோனா தொற்றாளர்கள் - வைத்திய நிபுணர் சுதத் சமரவீர

நாட்டில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்த மூன்று நபர்கள் உட்பட அண்மையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். 

நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸ் நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்ட வயதானவர்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். 

எனவே, வயதானவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது மற்றும் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம். 

இந்நிலையில், மக்கள் அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக கடைப்பிடித்தால், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான போரை எளிதில் வெல்ல முடியும் என தெரிவித்துள்ளார். 

பேலியகொடை மீன் சந்தை கொரோனா கொத்தணி பரவியதால், மக்கள் மீன் சாப்பிடுவதற்கு அஞ்சமடையத் தேவையில்லை என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 

இருப்பினும், கடைகளுக்கு சென்று வந்த பின், உணவுப் பொதிகளைக் கையாளும் போது, அல்லது உணவைத் தயாரிப்பதற்கு அல்லது உட்கொள்வதற்கு முன்பு குறைந்தது 20 விநாடிகள் சவர்க்காரமிட்டு கைகளை எப்போதும் கழுவுவது முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment