பண்டாரவளையில் கொரோனா சிகிச்சை நிலையம் - News View

Breaking

Post Top Ad

Thursday, October 29, 2020

பண்டாரவளையில் கொரோனா சிகிச்சை நிலையம்

கொரோனா நோய்த் தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்கும் பொருட்டு பண்டாரவளையில் கொரோனா சிகிச்சை நிலையமொன்றினை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதனை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பதுளைக் கிளைத் தலைவர் பாலித்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

இது தொட்ரபில் அவர் தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், பண்டாரவளை பொது வைத்தியசாலை வளாகத்தில் மேற்படி கொரோனா நிலையப் பிரிவு இடம்பெறும், இப்பிரிவில் நூறு நோயாளர்கள் சிகிச்சை பெறும் வகையில் நூறு கட்டில்கள் இடப்பட்டுள்ளன. 

நூறு நோயாளர்கள் ஒரு தடவையில் சிகிச்சை பெறும் வகையில் அனைத்து வசதிகளும் இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad