வெளிவிவகார கொன்சியூலர் சேவைகள் இடைநிறுத்தம் - முற்பதிவின் அடிப்படையில் ஒரு சில சேவைகள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 7, 2020

வெளிவிவகார கொன்சியூலர் சேவைகள் இடைநிறுத்தம் - முற்பதிவின் அடிப்படையில் ஒரு சில சேவைகள்

வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவினால் முன்னெடுக்கப்படும் அனைத்துச் சேவைகளும் இன்றும் (08) நாளையும் (09) தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் பரவலை கருத்திற்கொண்டு குறித்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக, அவ்வமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு செலிங்கோ கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள கொன்சியூலர் விவகார பிரிவிற்கு வெளிநபர்கள் மற்றும் விருந்தினர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் மரணம் தொடர்பான விடயம், மரணம் தொடர்பான ஆவணங்களுக்கான உதவி மற்றும் ஏற்றுமதி ஆவணச் சான்றிதழ்கள் தொடர்பான விசாரணை மாத்திரம் முன்கூட்டி ஏற்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்படும் என, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவசர தொலைபேசி இலக்கம் மூலமாக நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இடம்பெறும் மரணங்கள் தொடர்பாக 011 233 88 36, 011 233 59 42 எனும் தொலைபேசி இலக்கங்கள் மூலமாக தொடர்புகொள்ள முடியும் என்பதோடு, ஏற்றுமதி ஆவணச் சான்றிதழ்கள் தொடர்பாக 011 233 88 12 எனும் தொலைபேசி இலக்கம் மூலமாக தொடர்புகொள்ள முடியும் என, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment