கிழக்கு பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பீடத்தின் இரண்டாவது வருடாந்த ஆய்வு மாநாடு - News View

About Us

About Us

Breaking

Thursday, October 1, 2020

கிழக்கு பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பீடத்தின் இரண்டாவது வருடாந்த ஆய்வு மாநாடு

ருத்ரா

கிழக்கு பல்கலைக் கழகத்தின் வணிக முகாமைத்துவ பீடத்தின் இரண்டாவது வருடாந்த ஆய்வு மாநாடானது புதன்கிழமை நடைபெற்றது.

பொருளியல் துறை தலைவர் கலாநிதி ச.ஜெயராஜா தலைமையில் நிகழ்வுகள் யாவும் நடைபெற்றன.

'சமூக நல்வாழ்வுக்காக வணிக அறிவினை பகிர்தல்' எனும் தொணிப் பொருளில் இவ்வாய்வு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வணிக முகாமைத்துவ பீடத்தில் இறுதி பரீட்சையினை நிறைவு செய்துள்ள மாணவர்களின் ஆய்வுகளின் முடிவுகளை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இவ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எவ்.சி.ராகல் மற்றும் கௌரவ விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழக திருமலை வளாக முதல்வர் பேராசிரியர் வி.கனகசிங்கம் கலந்து கொண்டனர்.
மொறட்டுவை பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தரும் தற்போதைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழவின் உறுப்பினருமான சிரேஸ்ட பேராசிரியர் ஆனந்த ஜெயவர்த்தன முதன்மை பேச்சாளராக கலந்து சிறப்பித்தார். 

இவ்வாய்வு மாநாட்டின் ஒரு பிரதான பகுதியாக 'தொழில்துறை உரையாடல்' நடைபெற்றது.

எமது பிரதேசத்தில் வளர்ந்து வரும் இளம் தொழில் முயற்சியாளர்களின் வெற்றி மற்றும் அனுபவங்களை வணிக முகாமைத்துவ மாணவர்களுடன் பகிர்வு செய்யும் வகையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதேவேளை தற்போது நாட்டில் நிலவும் கொவிட்-19 பரவல் காரணமாக இம்முறை இந்த ஆய்வு மாநாடு நிகழ்நிலை வடிவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வின் செயலாளராக கலாநிதி பாரதி கென்னடி செயற்பட்டார்.பீடாதிபதி திருமதி வீ.ஆர்.ராகல் அவர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ் இவ் நிகழ்வு நடைபெற்றது. 

No comments:

Post a Comment