வை.எம்.எம்.ஏ. பேரவை ஏழு முக்கிய விடயங்களை உள்ளடக்கிய அறிக்கையை அமைச்சர் அலி சப்ரியிடம் கையளித்தது - News View

Breaking

Post Top Ad

Thursday, October 1, 2020

வை.எம்.எம்.ஏ. பேரவை ஏழு முக்கிய விடயங்களை உள்ளடக்கிய அறிக்கையை அமைச்சர் அலி சப்ரியிடம் கையளித்தது

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தப்பட வேண்டிய விதிகள் உள்ளிட்ட 7 பிரதான விடயங்களை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றினை, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை, நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் (30) புதன்கிழமை அமைச்சில் வைத்து கையளித்தது.

பேரவையின் தேசியத் தலைவர் சஹீத் எம். ரிஸ்மி தலைமையில் அமைச்சரைச் சந்தித்த பத்து பிரதிநிதிகள் அடங்கிய தூதுக்குழுவினர், இது தொடர்பிலான விரிவான கலந்துரையாடலை நடாத்தியதன் பின்னரே, இதனை அமைச்சரிடம் கையளித்தது. 

வை.எம்.எம்.ஏ. பேரவையினால் கையளிக்கப்பட்ட ஏழு முக்கிய விடயங்கள்

01) முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தப்பட வேண்டிய அறிக்கையை (விதிகள் உட்பட) ஒரு மாதத்தில் சமர்ப்பித்தல்.

02) மத்ரஸா விதிமுறைகளை மறுபரிசீலனை செய்து, புதிய முன்மொழிவை ஒப்படைத்தல்.

03) தொற்று நோயால் மரணிக்கும் உடல்களை (தகனம் செய்யாமல்) அடக்கம் செய்தல்.

04) கைது செய்யப்பட்டு இன்னும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுவிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுத்தல்.

05) காதி நீதிபதிகளுக்காக அரச அங்கீகாரம் பெற்ற வை.எம்.எம்.ஏ. பயிற்சி நிலையம் ஒன்றை அமைத்தல்.

06) காதி நீதிபதிகளுக்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய கைப்புத்தகம் ஒன்றைத் தயார் செய்தல்.

07) காதி நீதிபதிகளுக்கான விதி முறைகள் அடங்கிய அச்சிடப்பட்ட 5 ஆயிரம் கோப்புகளை வழங்குதல் என்பனவாகும். 

இக்கலந்துரையாடல், மிகவும் ஆக்கபூர்வமானதாக அமைந்திருந்ததாகவும், இதற்கு அமைச்சரிடமிருந்து சாதகமான முறையில் பதில் கிடைத்ததாகவும், வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத் தலைவர் சஹீத் எம். ரிஸ்மி தெரிவித்தார். 

இத்தூதுக்குழுவில், தவிசாளர் (தேசிய விவகாரங்கள்) கே.என். டீன், தேசிய பொதுச் செயலாளர் (காதி நீதிபதி, சட்டத்தரணி) சாபீர் சவாத், முன்னாள் தலைவர்களான காலித் எம். பாரூக், எம்.என்.எம். நபீல், சட்டத்தரணி அஷ்ரப் ரூமி, ஜனாதிபதி சட்டத்தரணி இல்யாஸ், வை.டப்ளியூ.எம்.ஏ. தலைவர் பவாஸா தாஹா, டாக்டர் மரீனா ரிபாய், விசேட உறுப்பினர் லத்தீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

(ஐ.ஏ. காதிர் கான் 

No comments:

Post a Comment

Post Bottom Ad