வாகரை பிரதேச விவசாயிகளுக்கு 56 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்களை கையளித்தார் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 1, 2020

வாகரை பிரதேச விவசாயிகளுக்கு 56 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்களை கையளித்தார் மட்டக்களப்பு அரசாங்க அதிபர்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு வாகரை பிரதேச விவசாயிகளுக்கு 56 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் கையளிக்கபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீட்டுத் தோட்டங்களை அபிவிருத்தி செய்வோம் எனும் எண்ணக்கருவில் இவ்வுபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

வாகரைப் பிரதேசத்தில் இயற்கை முறை விவசாயத்தினை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கே இவ் உபகரணத் தொகுதி மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா வாகரை பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.

வாகரை பிரதேச செயலாளர் எஸ். கரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, விவசாய விரிவாக்கல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் வீ. பேரின்பராஜா பிரதேச உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ. சுதாகரன் உட்பட அரச அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் பலரும் பிசன்னமாகியிருந்தனர்.

நஞ்சற்ற உணவுகளை உற்பத்தி செய்யும் நோக்கில் இயற்கை முறையில் விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகள் 177 போருக்கு சுமார் 56 இலட்சத்தி 39 ஆயிரம் ரூபா பெறுமதியா நீர் இறைக்கும் மோட்டார்கள் சர்வதேச தன்னார்வ அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டன.

இப்பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 325 விவசாயிகளில் 157 பேருக்கு தலா 27ஆயிரம் ரூபா பெறுமதியான நீர் இறைக்கும் மின் மோட்டார்களும், 20 விவசாயிகளுக்கு தலா 70ஆயிரம் ரூபா பெறுமதியான எரிபொருளில் இயங்கும் நீர் இறைக்கும் இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

No comments:

Post a Comment