தேசிய வளங்களை தாரைவார்க்கவே எம்.சி.சி. ஒப்பந்தம், இதனை இலகுவாக்கவே 20 ஆவது திருத்தம் : கே.டி. லால்காந்த - News View

About Us

About Us

Breaking

Sunday, October 11, 2020

தேசிய வளங்களை தாரைவார்க்கவே எம்.சி.சி. ஒப்பந்தம், இதனை இலகுவாக்கவே 20 ஆவது திருத்தம் : கே.டி. லால்காந்த

(இராஜதுரை ஹஷான்) 

எம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்பில் ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் தற்போது மௌனம் காப்பது வியப்பிற்குரியது. 20 ஆவது அரசியலமைப்பினை மக்களின் எதிர்ப்புக்களின்றி நிறைவேற்ற அரசாங்கம் சிறந்த திட்டத்தை வகுத்து அதனை செயற்படுத்தி வருகிறது என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்தார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய மக்கள் அரசாங்கத்தின் நோக்கத்தை தற்போது புரிந்து கொண்டுள்ளார்கள். நாட்டை பிளவுப்படுத்தவும், மேற்குலகத்தவர்களின் ஆக்கிரமிப்புக்களை ஊக்கப்படுத்தவும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 

அரச நிதி செலவு தொடர்பில் கண்காணிப்பதற்கு அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் உரிய வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டன. காணிகளை பிற நாட்டவர்களுக்கு வழங்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உண்டு. பெற்றுக்கொண்ட கடன்களை மீள் செலுத்த அரசாங்கத்திடம் பணம் கிடையாது. கடன் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்ட போது அம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இவ்வாறான நிலையே எதிர்காலத்தில் அனைத்து தேசிய வளங்களுக்கும் ஏற்படும். 

அரச காணிகளை வெளிநாட்டவர்களுக்கு தாரைவார்க்கும் விதமாகவே எம்.சி.சி. ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை இலகுவாக்கவே அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இரட்டை குடியுரிமையினை கொண்டவர்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்த வேண்டும். என நாட்டு மக்கள் எவரும் எதிர்பார்க்கவில்லை. அரசாங்கத்துக்கே அதன் தேவை காணப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment