மஸ்கெலியாவில் 17 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Friday, October 9, 2020

மஸ்கெலியாவில் 17 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொக்கா தோட்ட சீமை தோட்ட பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் நேற்று 8 ஆம் திகதியன்று முதல் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார். 

மினுவங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலைக்கு அருகில் பணி புரிந்த மூவர் மஸ்கெலியா மொக்கா சீமை தோட்ட பிரிவில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணுமாவார்.

இவர்கள் தங்களது இல்லத்திற்கு கடந்த 7ஆம் திகதியன்று புகையிரதம் மூலம் ஹட்டன் நகரிற்கு சென்று அங்கிருந்து பஸ் மூலம் மஸ்கெலியா சென்று மஸ்கெலியா நகரில் இருந்து முச்சக்கர வண்டி மூலம் அவர்களின் இல்லத்திற்கு சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 

அதனைத் தொடர்ந்து மினுவங்கொடை பகுதியில் பணியாற்றியவர்கள் இப்பகுதிக்கு வந்துள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிஸாரும் பொது சுகாதார அதிகாரிகளும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக நேற்று 8ஆம் திகதியன்று இரவு 8 மணியளவில் மஸ்கெலியா பொலிஸார் மவுசாக்கலை இராணுவத்தினர் நுவரெலியா சுகாதார உத்தியோகத்தர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். 

மினுவங்கொடை பகுதியில் பணியாற்றிய 26, 27 மற்றும் 29 வயதுடையவர்களை கண்டியில் உள்ள தனிமைப்படுத்தும் முகாமிற்கு கொண்டு சென்றதாகவும் ஏனைய குடும்ப அங்கத்தவர்களை அவர்களின் இல்லத்திலேயே தனிமைப்படுத்தளுக்கு உட்படுத்தி உள்ளதாக மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment