வவுனியாவில் 1591சாரதிகளுக்கு எதிராக போக்கு வரத்துப் பொலிஸார் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, October 11, 2020

வவுனியாவில் 1591சாரதிகளுக்கு எதிராக போக்கு வரத்துப் பொலிஸார் நடவடிக்கை

வவுனியாவில் போக்கு வரத்து விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்திய 1591 வாகனச்சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல், தண்டப்பணம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார் .

இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வவுனியா போக்குவரத்து பொலிஸாரினால் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் கடந்த செப்டெம்பர் மாத காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 83 சாரதிகள், சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்திய 8 பேர் உட்பட 91 சாரதிகளுக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது .

வாகன காப்புறுதிப்பத்திரம், போக்குவரத்து அனுமதிப்பத்திரம், தவறான முறையில் வாகனம் செலுத்தியமை, வாகனம் செலுத்தும்போது தொலைபேசிப் பாவனை, வாகன இருக்கைப்பட்டி அணியாமை போன்ற 1500 சாரதிகளிடம் சிறு குற்றங்களுக்கு எதிராக தண்டப்பணம் அறிவிடப்பட்டுள்ளது .

இவ்வாறு கடந்த ஒரு மாதகாலப்பகுதியில், போக்குவரத்து விதிமுறை சட்டங்களை மீறிய 1591 வாகனச் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .

இவ்வாறு எதிர்வரும் காலங்களிலும், போக்குவரத்து பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment