ஜனாதிபதி கோத்தாவின் ஆட்சியிலே பெண்களுக்கு அனைத்து விதமான சுதந்திரங்களும் இருக்கின்றன - கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா பெருமிதம் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 17, 2020

ஜனாதிபதி கோத்தாவின் ஆட்சியிலே பெண்களுக்கு அனைத்து விதமான சுதந்திரங்களும் இருக்கின்றன - கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா பெருமிதம்

ஐ.எல்.எம் நாஸிம்

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தில் பெண்களுக்கு அனைத்து விதமான சுதந்திரங்களும் உள்ளன என்று கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யகம்பத் தெரிவித்தார்.

அம்பாறை கரையோர மாவட்டத்துக்கு நேற்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டு வந்த இவர் முஹமட் முஸ்தபா முஹமட் நிசாம் தலைமையிலான அனைத்து கட்சி செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறையில் மகளிர் அமைப்பினரை (15) சம்மாந்துறை அல் அர்சத் மஹா வித்தியாலய கேட்போர் கூடத்தில் சந்தித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில், இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் அனைத்து பெண்களின் உரிமைகளும் எமது அரசாங்கத்தில் உறுதி செய்யப்பட்டு உள்ளனர். பெண்களுக்கு அனைத்து விதமான சுதந்திரங்களும் உள்ளன. இதை இம்மாகாணத்தின் ஆளுனராக இருந்து பெருமையுடன் சொல்லி வைக்கின்றேன்.

பெண்கள் நாட்டுக்கும், வீட்டுக்கும் ஆற்றி வருகின்ற சேவைகள் அளப்பரியவை. திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் மொட்டு கட்சி மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை வெற்றி கொண்டு உள்ளது. இம்மகத்தான வெற்றியில் பெண்களும் பங்கும், பங்களிப்பும் மேன்மையானவை.

இந்நிலையில் இப்பெண்கள் அமைப்பினரை சந்திப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். நான் பெண்கள் அபிவிருத்திக்கான வேலை திட்டங்கள் பலவற்றையும் முன்னெடுத்து வருகின்றேன். 

அந்த வகையில் உங்கள் பிரச்சினைகளையும் நேரில் செவிமடுத்து தீர்த்து வைக்கவே வந்திருக்கின்றேன். 

No comments:

Post a Comment