இலங்கையுடனான பொருளாதார பங்குடமையை மேலும் வலுப்படுத்த இந்தியா உறுதி - News View

About Us

About Us

Breaking

Sunday, September 6, 2020

இலங்கையுடனான பொருளாதார பங்குடமையை மேலும் வலுப்படுத்த இந்தியா உறுதி

இலங்கைக்கு இந்தியா ரூ.30 கோடி உதவி || India to provide Rs 300 million aid  to Sri Lanka for livelihood development
முதலீடு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இலங்கையுடனான பொருளாதார பங்குடமையை மேலும் வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே வர்த்தகத்துறை அமைச்சல் பந்துல குணவர்தனவிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.

சந்திப்பு தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே கடந்த வியாழக்கிழமை வர்த்தகத் துறை அமைச்சர் பந்துல குணவர்த்தனவை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போதே உயர்ஸ்தானிகர் இதனைத் தெரிவித்தார். 

இந்த சந்திப்பின்போது இரு தரப்பினரும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முதலீடுகள் அடிப்படையிலான உறவுகள் மற்றும் பரஸ்பர நலன்களை அடிப்படையாகக் கொண்ட வர்த்தக நடவடிக்கைகள் ஆகியவற்றினை மேலும் அபிவிருத்தி செய்வது தொடர்பாக கவனம் செலுத்தியிருந்தனர். 

முதலீடு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இலங்கையுடனான பொருளாதார பங்குடமையை மேலும் வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை உயர் ஸ்தானிகர் இதன்போது தெளிவுபடுத்தியிருந்தார். 

தற்போதைய சூழ்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையிலான வர்த்தக மற்றும் அரச தரப்பினரின் தொடர்புகளை நிலைபேறானதாக மாற்றுவதற்கு எண்ணிம் (டிஜிட்டல்) கட்டமைப்பினை பயன்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் உயர் ஸ்தானிகர் கருத்து தெரிவித்தார். 

அதனடிப்படையில் இரு நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வர்த்தக சமூகங்கள் இடையில் குறிப்பிடத்தக்க கலந்துரையாடல்களை நடத்துவதற்குரிய சாத்தியங்களை ஆராய்வதற்கும் அவர்கள் இணங்கியிருந்தனர்.

No comments:

Post a Comment