மாகாண சபைகள் விவகாரத்தில் இந்தியா அச்சுறுத்தவோ, தலையிடவோ முடியாது - அமைச்சர் சரத் வீரசேகர - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 30, 2020

மாகாண சபைகள் விவகாரத்தில் இந்தியா அச்சுறுத்தவோ, தலையிடவோ முடியாது - அமைச்சர் சரத் வீரசேகர

மாகாண சபைகள் விவகாரம் என்பது இலங்கையின் உள்விவகாரம் என தெரிவித்துள்ள அமைச்சர் சரத் வீரசேகர அது குறித்து இலங்கை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும் ஏனைய நாடுகளின் தலைவர்கள் இல்லை என தெரிவித்துள்ளார்.

பாதுக்கையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாங்கள் மாகாண சபைகளை தொடர்ந்தும் தக்கவைக்க வேண்டும் என இந்தியா அச்சுறுத்தவோ அல்லது தலையிடவோ முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்களுடையது சுதந்திரம் இறைமை மிக்க நாடு இந்தியா எங்களுடைய உள்விவகாரங்களில் தலையிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையிலேயே மாகாண சபைகள் உருவாக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ள அவர் இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் இலங்கை பல நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் அதில் ஒன்று விடுதலைப் புலிகளிடமிருந்து ஆயுதங்களை களைவது என தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தியா இதனை நிறைவேற்றவில்லை இதன் காரணமாக இந்திய இலங்கை எவ்வளவு தூரம் வலுவானது என்ற கேள்வி எழுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment