தேர்தல் இழுபறிக்கு மத்தியில் உச்ச நீதிமன்ற நீதிபதியை தேர்வு செய்ய டிரம்ப் தீவிரம் - News View

About Us

About Us

Breaking

Monday, September 28, 2020

தேர்தல் இழுபறிக்கு மத்தியில் உச்ச நீதிமன்ற நீதிபதியை தேர்வு செய்ய டிரம்ப் தீவிரம்

அமெரிக்காவின் அடுத்த உச்ச நீதிமன்ற நீதிபதி பொறுப்புக்கு மத்திய மேல்முறையீட்டு நீதிபதி ஏமி கோனி பேரட்டின் பெயரை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ளார். 

உச்ச நீதிமன்றத்தின் மறைந்த நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பெர்க்கின் பதவியை நிரப்ப கடும் போட்டி நிலவுகிறது. 

நாட்டின் அரசமைப்புச் சட்டத்துக்கு உண்மையான, அறிவுபூர்வமான பெண் என பேரட்டை டிரம்ப் வர்ணித்தார். உச்ச நீதிமன்றத்தில் அனைத்து 9 இடங்களும் முறையே நிரப்பப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். 

வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், அஞ்சல் வழி வாக்குகள் பதிவு செய்வதில் சட்ட ரீதியாக சிக்கல்கள் ஏற்பட்டால், அவற்றைக் கையாள உச்ச நீதிமன்றம் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர் கூறினார். 

அஞ்சல் வழி பெறப்படும் வாக்குகளில் மோசடி நடக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி கூறுகிறார். 

பேரட்டின் நியமனம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அது உச்ச நீதிமன்றத்தில் கன்சர்வேட்டிவ் பெரும்பான்மையை உறுதிப்படுத்தும். 

ஆயுட்காலத்திற்குச் சேவையாற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்புகள் அமெரிக்க மக்களின் வாழ்வில் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. 

பேரட்டினின் நியமனத்திற்கு ஆதரவு அளிக்க ஆளும் குடியரசுக் கட்சியை பெரும்பான்மையாகக் கொண்ட செனட் சபை உறுதி அளித்தபோதும், அடுத்து தேர்வாகும் ஜனாதிபதியே புதிய நீதிபதியை தேர்வு செய்ய வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியினர் கூறி வருகின்றனர். 

இதனை ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரான ஜோ பைடனும் வலியுறுத்தி வருகிறார். தேர்தல் முடிந்த பின்னரே உச்ச நீதிமன்ற நீதிபதிப் பொறுப்பு பற்றி செனட் சபை விவாதிக்க வேண்டும் என்று பைடன் கூறினார்.

No comments:

Post a Comment