மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதை தடை செய்யும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்! - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 29, 2020

மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதை தடை செய்யும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

பசு வதையை தடை செய்வதற்கான தனது ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

ஊடக நிறுவன தலைவர்களுடன் இன்று அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் மஹிந்த ராஜாக்ஷ தெரிவித்தார். 

பசுவதை தொடர்பில் பிரதமர் சமர்ப்பித்திருந்த ஆலோசனை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, இன்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிக்கையில், உடனடியாக அமுலாகும் வகையில் பசு வதையை தடை செய்வதற்கான ஆலோசனைக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.

விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் நிலவும் நாடு என்ற ரீதியில் இலங்கை கிராம மக்களின் ஜீவனோபாய அபிவிருத்திக்காக கால்நடை வளத்தின் மூலம் கிடைக்கும் பங்களிப்பு பாரியதாகும். 

பசு வதை அதிகரித்ததன் காரணமாக பாரம்பரிய விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது தேவையான கால்நடை வளம் போதுமானது இல்லை என்பதும், இறக்குமதி செய்யப்படும் பால் மாவிற்காக வெளிநாட்டுக்கு செல்லும் பெரும் தொகையிலான அந்நிய செலாவணியை கட்டுப்படுத்தி கிராம மக்களின் ஜீவனோபாயத்தை மேம்படுத்தக்கூடிய வகையில் உள்ளூர் பசும் பால் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு போதுமான பசுக்கள் இல்லாமையால் இந்த தொழிற்துறையின் வளர்ச்சிக்கு தடை ஏற்பட்டுள்ளது.

பல்வேறு தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமைக்கமைவாக இந்த நிலைமையை கவனத்திற் கொண்டு பசு வதையை தடை செய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பசு வதை தொடர்பில் தற்பொழுது நாட்டிற்குள் நடைமுறையில் உள்ள 1958 ஆம் ஆண்டு இலக்கம் 29 இன் கீழான கால்நடை சட்டம், 1893 ஆம் ஆண்டு இலக்கம் 9 இன் கீழான அல்லது கொலை கட்டளைச் சட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய சட்டம் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களினால் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முடியாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், பசு இறைச்சியை பயன்படுத்தும் பொதுமக்களுக்குத் தேவையான இறைச்சியை இறக்குமதி செய்தல் மற்றும் நிவாரண விலைக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கும், விவசாய பணிகளுக்காக பயனுள்ள வகையில் பயன்படுத்த முடியாத வயதான நிலைமைக்கு உள்ளாகும் பசுக்கள் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உடனடியாக நடைமுறைபடுத்தும் வகையில் நாட்டில் பசு வதையை தடை செய்ய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

சுப்ரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment